இறகொன்று தீண்டுதே
இறகொன்று தீண்டுதே
இமை ஓன்று தாண்டுதே
உனக்கான வண்டா மேய்றேன்
சிறகொன்று தோன்றுதே
சிறை கொண்டு போகுதே
எனக்கான அம்பா சாய்றேன்
மனம் அவள் வேண்டுதே
மதி பெயர் சொல்லுதே
விதி எது செய்யுமோ
பதி அவள் வேண்டுமே
கதி அவள் ஆகுதே
கைது மனம் ஆனதே
பிறை நிலவாகுறேன்
இரை தேடிப்போகிறேன்
அவளுக்குள் மூடுறேன்
அனலுக்குள் மூழ்கினேன்
அவஸ்தைகள் கூடுதே
வில் அம்பு வீழுதே
கல் குறி வீசுதே
நெல் மணி காணுதே
இவன் மனம் நாணுதே
நெஞ்சு புரை ஏறுதே
பஞ்சு இன்று தீயாகுதே
தவம் தனை போக்குதே
இணை அது கேக்குதே
துணை தனை தேடுதே
கணை எங்கோ போகுதே
அணை கரை தாண்டுதே
முனை குத்தி மாயுதே
இலை பட்டு தேயுதே
இரும்பிலும் ஈரமா
துரு தனும் சேருதே
வண்ணங்கள் மாறுதே
எண்ணங்கள் புதி தாகுதே
இதழ் பின்பு போகுதே
இதில் எதை தேடுதோ
கனவுகள் காணுதே
நிஜங்களைக் கோறுதே
உந்தன் விரல் கேட்குதே
உயிர் குரல் ஏவுதே
உன் மடி சாயுதே
உன் அடி சேருதே