அனிதா தமிழ் காவியா

அனிதா தமிழ் காவியா
தவறான மருத்துவம் தன்னில்
தாயை இழந்த நீ,
அன்றே... மருத்துவராக வேண்டி
இலக்காக நெஞ்சில் கொண்டாய்.
உருகி உருகி படித்தாய்
நீ வந்த பின்புலத்தில்
எவரும் தொடாத சிகரம்
அதை எட்டியே பிடித்தாய்,
உயிர்க்கொடை கொண்டு உணர்த்திய
உன் பெருமதிப்பு யாரறிவார்...
மேலை நாடுகளில் பிறந்திருந்தால்
நீயொரு மருத்துவ விஞ்ஞானி.
இந்தியா ஒரு நரகமோ
என்றெண்ண தோன்றுதே இன்று...
ஏழைக்கு சாகும் வரை
ஏதும் கிட்டாத இயலாமையோ.
கண்ணில் ஈரத் துளிகளோடு
என்றும் தமிழ் உணர்வுத்தீயாய்
எம் ஆகாயத்தில் கருமேகங்களாய்
அனிதாவின் நினைவு உலவும்...
சு.சுடலைமணி