உயிர் எழுத்தும் மெய் எழுத்தும்
![](https://eluthu.com/images/loading.gif)
பொய்யாக இல்லாமல்
மெய்யாக உன்னைப்பற்றி
ஓர் வெள்ளைத்தாளில் எழுதி
தந்த ஒரு கவிதைக்கு !
உன் இதழ் பதித்து "முத்தம் "
ஒன்றை தந்துவிட்டாய் !
உயிர் எழுத்தும் .
மெய் எழுத்தும்
படித்துதான் பார்த்திருக்கிறேன் !
இன்றுதான்
உயிர் எழுத்தும்
மெய் எழுத்தும்
குதித்து பார்க்கிறேன் !