தூய்மை இந்தியா
சுத்தமாக இருக்க வேணும் சுற்றுப்புறச் சூழல்! – அது
சுகம் கொடுத்து நலமளிக்கும் சொர்க்கத்தின் வாசல்!!
எத்தனைமுறை பார்த்தாலும் கவனத்தை ஈர்க்கும்! – சுற்றம்
எழிலாக இருந்தால்தான் கவலைகளைத் தீர்க்கும்!!
***
புகை கிளம்ப வாகனங்கள் ஓட்டக் கூடாது! – நல்ல
புனிதமான இடங்கள் தன்மை இழக்கக் கூடாது!!
பசுமையான வளங்களையோ தகர்க்கக் கூடாது! – நல்ல
பலன்கொடுக்கும் மரம் வளர்க்கத் தவறக் கூடாது!!
***
கழிவுநீரு வீட்டைச்சுத்தித் தேங்கக் கூடாது! – நாம
கண்ட இடத்தில் குப்பைகளைப் போடக் கூடாது!
சுத்தம்தானே சுகமளிக்கும் மறக்கக் கூடாது! – எங்கும்
தூய்மையான காற்றுக்குத் தடை இருக்கக் கூடாது!!