பர்தா காதலி
பர்தா என்னும் கருமேகத்திற்குள்
மறைந்திருக்கும்
என் பெண்ணிலவே..!
உன் முகம் தவிர்த்து ..
உடல் மறைத்து..
நீ சூடியுள்ள பர்தா..!
என்னை காதல் என்ற கயிற்றால்
கட்டிவைத்து உதைக்குதடி ...!
நான்
உன்னை நேசிக்கிறேன்
உன் பர்தாவை சுவாசிக்கிறேன்
உன் பர்தாவின் நிழலையோ என் கவிதை முதல் வரியென வாசிக்கிறேன் ...
சொல்லப்போனால்உன்னை காதலிக்க
உன் பர்தா முதல் காரணமாக இருக்குமோ என என் மனதோரத்தில் யோசிக்கிறேன் ...!
உன் சமயநெறில் பெண்கள் "கட்டாயம் " பர்தா அணியவேண்டும்
என கூறுவதை நான் ஆதரிக்கவில்லை ..
ஆனால் நீ தினம்தோறும் பர்தா அணிந்துவருவாய??
என்பதை காண நான் ஒரு நாய்க்குட்டி போல் கல்லூரி வாசலில் காத்துக்கிடக்கிறேன் ....!!
உன் சிவந்த கன்னங்கள் ரோசாப்பூவுக்கு நிகர் .. அதிலும் உன் குட்டிக்குட்டி பருக்கள் விண்வெளி கோள்களுக்கு சவால் ..
முகத்தை மறைத்த நிலையிலோ
உன் விழி அழகான கத்தி
பார்க்கும் நொடியெல்லாம் வீசுகிறாய் !! சுகமாய் வலிக்கிறது !!!
இது ஒரு புறம் இருக்க மற்றோருபுறமோ
உந்தன் பாதம்
ஐயோ !!!!!
தனக்கும் வலிக்காமல் தரைக்கும் வலிக்காமல்
நீ நடக்கும் நடையோ ஐயய்யோ !!!
இப்படி நீயும் உன் பர்தாவும் சேர்ந்து எனக்குள் பல சேதத்தை செய்துவிட்டிர்கள்
அதை சீர்செய்ய நீ எனக்கு
"பர்தா காதலி" யாகவே கிடைக்க நான் விரும்புகிறேன் ..!!!!!!!