கிழவனின் பிரேதம்

கிழவனின் மார்பு கூடுக்குள் விசும்பிய சதை துண்டு மௌனமானதும்,
தூரத்தில் ஒப்பாரி சப்தத்துடன் வந்த குரல்கள்,
அந்த ஆத்மாவை வெருண்டோட வைத்திருக்கும்.

பாடையில் பிரேதத்திற்கு மாலையிட்டவர்கள்,
சொந்தம் சொக்கரானுக்கு மது வாங்கி கொடுத்தவர்கள்,
பிரேதத்தை நெருப்பூட்டி எரிக்க பம்பரமாய் சுழன்றவர்கள்,
வாய்க்கரிசியும் பாலும் வாய் நிறைய நிரப்பியவர்கள்,

வாழும்போது கால் வயிறு கஞ்சி கொடுக்காதவர்களாய் போனதாலேயே..

எழுதியவர் : சையது சேக் (7-Sep-17, 4:45 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 73

மேலே