காலம்

காலம்
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்
காலம்
பொன் போன்றது
என்பர் அறியாதவர் !
பொன் போனால்
திரும்பி வரும்
உயிர் போனால்
திரும்ப வருமா ?
காலம்
பொன்போன்றது அல்ல
உயிர் போன்றது !
வாழ்வில்
கடந்த காலம்
மீண்டும் வராது
எதிர்காலம்
எதிர் நோக்குவது
நிகழ் காலமே
நிலையானது !
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை