ஒரு புள்ளியில் தொடங்கியப் பயணம்

ஒரு புள்ளியில் தொடங்கியப் பயணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேடல் இறைவன்
திகட்டிய அலைச்சல்
பயண ஊர்வலம்
ஏதோ முடிவில்...

தொடக்க வாழ்வு
தொந்தரவில் ...

மிஞ்சிய வாழ்வு
மிரட்டலில்...

தொடங்கிய புள்ளி
எங்கோ முற்று பெற...

விளைச்சல்
வியப்பை தேடி
வியர்வையில்
விண்ணை அடைய
ஆத்ம அமைதி பெற
அன்றோ...


ஆத்ம உணர்வை
அடிமையாக்கி..
சிந்தனை
சில்லறையாக்கி..

அனாதை ஆக்கிய
தாய்நாட்டில்
துணையை
தூக்கி எறிந்து
துன்பத்தை
தேடியது இன்றோ...?

மீண்டும்
ஒரு புள்ளியில்
தொடங்கியப் பயணம்..

பழைய கற்கால வாழ்வை
பகிந்துன்ன .!

- லாவண்யா

எழுதியவர் : லாவண்யா (15-Sep-17, 1:09 pm)
சேர்த்தது : லாவண்யா
பார்வை : 113

மேலே