பிரிவின் தவிப்பு

நான் வராத இன்றைய தினமாவது ,
உன் விழிகள்
என் இடத்தை நோக்கட்டும் !!
உன் இதழ்கள்
என் பெயரை உச்சரிக்கட்டும் !!
உன் இதயம்
எனக்காக ஒரு நொடி துடிக்கட்டும் !!
உன் கவனம்
என்னை நினைத்து சிதறட்டும் !!
உன் மூச்சுக்கரச்சு
என்னை தேடி பயணிக்கட்டும் !!
உன் விரல்கள்
என் விழிநீரை தடுக்கட்டும் !!
இவை அனைத்தும்
கற்பனையிலாவது நிகழட்டும் !!!