மனைவியாதிகாரம்

அன்பாக நாலு வார்த்தை பேசத் தெரியாது சனியனுக்கு!

காதல் என்ற வார்த்தை கேட்டலே தீயை மிதித்து போல் கத்துவாள் சண்டாளி!

ஊடல் கூடல் என்றால் இது எந்த ஓட்டல் மெனு என்பாள் ரசனை கெட்ட மூதேவி!

நான் கலாரசிகன் என்று பெருமைப்படும் போது
யார் அந்த கலா என்பாள் சந்தேகம் பிடித்த பிசாசு!

ஆனாலும் தன்னைவிட்டு கணநேரம் பிரியக்கூடாதென நினைப்பாள் கள்ளி

அவள் பாஷையில் இதுதான் காதல் அன்றோ!

எழுதியவர் : மனோன்மணி மோகன் (20-Sep-17, 11:07 pm)
பார்வை : 110

மேலே