கவிதை மரமாய் வளர்ந்து நிற்பேன்
வேறாய் எப்படி நினைக்க முடியும் உன்னை
வேராய் தான் நினைக்கிறன் !
நீயாய் நித்தம் என் மீது
நீராய் கொஞ்சம் பார்வைகளை
தெளித்துவிட்டு போ !
நான் பட்டுப்போனாலும்
தொட்டு துளிர் விட்டு
பூவாய் மலர்ந்து
காயாய் கனியாய்
கவிதை மரமாய் வளர்ந்து நிற்பேன் !
உன் முன்னே !
நீ என்றும் இளைப்பாறிகொள்ள !