திருமண அழைப்பிதழ்
பத்து பொருத்தமும் பார்த்து தேதிகளை குறித்து,
இஸ்ட தெய்வங்களை அட்டையில் அச்சிட,
உள்ளே உள்ள ககிதத்தினுள் என் உறவுகளை சொல்லி இடப் புறத்தில் என் பெயரையும்
உன் உறவுகளை சொல்லி வலப் புறத்தில் உன் பெயரையும் அச்சிட .
தாய் மாமன் உறவிலிருந்து தாதா பாட்டி உறவு வரை தட்டச்சு தட்டிட
இறுதியில் இரு வீட்டார் அழைப்பு என நம் இருவருக்கும்
ஒரு திருமண அழைப்பிதழ் அச்சிடும் தேதி பார்த்து காத்து கொண்டிருக்கின்றேன் .
உன் வீட்டு சேதி கேட்டு அனுப்பிடு மலரே!.
நிலவே திரியுடன் விளக்கு காத்து கொண்டிருக்கிறது .
வா வந்து நீ தீபம் ஏற்றிட நம் வாழ்க்கை எனும் ஜோதியை
ஒளிமயமாய் அமைத்திடலாம் ஆருயிரே!..