என்று பேசப்போகிறாய்
காற்றிலே கனவுகளின் கயிறு சேர்த்து
ஒரு ஊஞ்சல் ஆடுகிறேன்
நேற்றிலிருந்து கவிதைகளின் பூக்கள் கோர்த்து
ஒரு பூஞ்சோலாய் செய்கிறேன்
சேற்றிலே செந்நீரோடு துளியென கலந்து
ஒரு புழுவாய் நீந்துகிறேன்
போற்றியே இறையாய் மனதில் கொண்டு
ஒரு கீதம்தான் பாடுகிறேன்
பூவிலே தேன் துளிகல் தேடும்
ஒரு வண்டாக மாறுகிறேன்
தீவிலே தனிமை கொண்ட தீவில்
ஒரு துணையாக தேடுகிறேன்
சாவிலே இறுதியாக உன் மடிசேரும்
ஒரு மோட்சம் கேட்கிறேன்
பாவியே எதுதான் என்னை செய்தாய்
ஒரு தாடியோடு திரிகிறேன்
ஆவியாய் உருவம் கொள்ளாமல் ஆவியாய்
ஒரு நிலையில்லாமல் அலைகிறேன்
தேவியே என்ஆழம் தீண்டிய தேவியே
ஒரு வரம் வீசிச்செல்வாயா
காவியாய் துறவு பூண்ட காவியாய்
என்னை ஆகிடத்தான் சொல்வாயோ
நீவியே என் இளமையை நீவியே
உன் பார்வைகளால் கொல்வாயோ
சாவியாய் உன் சிரிப்பை சாவியாய்
என் இதயத்தை திறக்கிறாய்
கருவாய் என் கருவறை குழந்தையாய்
என் இதயத்தில் பிறக்கிறாய்
மருவாய் உடல் ஓட்டும் மருவாய்
என்று எனில் ஒட்டிக்கொள்வாய்
தஞ்சமாய் தாலி சுமக்கும் மணவாட்டியாய்
என்று என்னை கட்டிக்கொள்வாய்
நெஞ்சமாய் என்தோல் சேர்க்கும் நெஞ்சமாய்
என்று உனக்குள் சேர்ப்ப்பாய்
கொஞ்சமாய் உன்சிறை உடைத்து பஞ்சாய்
பறந்து எனில் தூரிகையாவாயா
தஞ்சமாய் என்இதய இருளில் வந்து
உன்னை மறந்து துயில்வாயா
திருவாய் மவுனம் சுமக்கும் உன்திருவாய்
திறந்து என்று பேசப்போகிறாய்
துரூவாய் ஈரம் சுமக்கும் ஒருதுரூவாய்
தினம் நான் தேய்கிறேன்