வாழ்க தமிழ் வளர்க தமிழ்

நெற்றிக்கண்ணுடையான் மகளாய் பிறந்தாய்!
குறு முனிவன் தன்னிடம் வளர்ந்ததை
புரட்சிக்கவி மூலம் உணர்ந்தேன் !
தொன்மையின் தலைவியாய்
மொழிகளின் தாயாய்
வானோங்கி உயர்ந்தவளே!

முக்கனியின் சுவையை வீழ்த்தியவளே !
எழிலூட்டும் வனப்பினை கொண்டிலங்குகிறாய் !
சாவா மருந்தை உட்கொண்டாய் போலும்
என்றென்றும் நிலைத்து நிற்கிறாய் !
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் !

எழுதியவர் : kamalesan (8-Oct-17, 12:55 am)
பார்வை : 281

மேலே