நானா நீயா என்ற சதுரங்க ஆட்டத்தில்

குல்லா தொப்பியோடும் குழந்தையின் மழலை குரலோடும் ஏழைகளின் தோழனாகி மக்கள் மனம் கவர்ந்த தலைவர் எம்.ஜி .ஆர்., பிள்ளைகளுக்கு சோறையும் கல்வியையும் சேர்த்து ஊட்டி குழந்தைகளின் வயிற்றுப பசியையும் நாட்டின் அறிவு இருட்டையும் அகற்றிய ஒரு தலைமையைத் தந்த கல்வி கண் திறந்த காமராசன், இவர்கள் வந்த வழியில் வந்த அரசின் இன்றைய நிலை என்ன .

மக்கள் திட்டங்கள் அடுக்கி வைத்து அறிக்கை இட வேண்டிய முதலமைச்சர் , மக்களின் திட்டங்களுக்காக பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் இருவரும் இன்று பெரும்பாலும் செய்து கொண்டிருப்பது இது தான்.ஆட்சி கவிழாது என்று அறிக்கை இடும் முதலமைச்சர் , ஆட்சி நிலைக்காது என அறிக்கை இடும் எதிர் கட்சி தலைவர் இது தொடர்கதையாக தமிழக செய்தி தாள்களில். இடை இடையே இதற்கு சுவை கூட்டும் அமைச்சர்களின் விமர்சன அறிக்கைகைகள் வேறு வரிசையாக வந்து சேர்கிறது.

ஆளும் அரசு எதிர்கட்சி என்று இரு தரப்பினரும் உன்னை பாரு, என்னைப் பாரு என்ற போட்டி மனப்பான்மை கொடுத்த வேள்வியில் மக்களை பார்க்க மறந்து விட்டனர். இது தானே உண்மை.மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அரசுக்கு அடி வயிற்றில் நெருப்பு எரிகிற போல நிலைமை இன்று. தன வீட்டில் நெருப்பு எரியும் போது ஒருத்தன் அதை அணைப்பானா சுற்றியுள்ள வீடுகளில் உள்ள நெருப்பை அணைக்க ஓடுவானா. இந்த கேள்விக்கான பதில் தான் இன்று தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் நிலைமை.

ஆட்சிக்குள் அமைச்சரைவைக்குள் அமைச்சர்களுக்குள் உள்கட்சிக்குள் என அவர்களுக்குள் நடக்கும் உள்கட்சி பூசலை சரி செய்வதெற்க்கே அவர்கள் நேரம் சரியாக இருக்கிறது. அவர்கள் பூச பூச அங்கே ஓன்று இரண்டு ஓட்டைகள் வர மீண்டும் அவர்கள் பூச தொடங்க என்று அவர்கள் நேரமும் கவனமும் அதிலே போய்விடுகிறதே. இதுலே இவர்கள் மக்களுக்கு உள்ள ஓட்டைகளை பார்க்க நேரம் இருக்குமா என்ன. அந்த ஓட்டை உடைசல்களை பூசிக் கொண்டிருந்தால் இவர்கள் மக்களுக்கு என்று புது வீடெலெல்லாம் (திட்டங்கள்) கட்டுவது என்பதுசாத்தியமாகுமா

இடையிடையே ஸ்லீப்பர் செல் என்று அரசியலுக்கு புது வார்த்தைகள் காட்ட்டி பூச்சாண்டி காட்டும் சில புது புல்கள்கள் கூட முளைத்து தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறது. முதல்வர் விட்டு சென்ற ஆட்சியையை ஏதோ உயில் எழுத மறந்து விட்டுச் சென்ற ஒரு வீட்டு சொத்துப் போல அதை பிடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி பேசுவது எப்படி சரியாகும். முதல்வர் அவர்கள் விட்டு சென்றது ஒரு தலைமை பொறுப்பல்லவா அதை எப்படி சொந்தம் என்று சொல்லி கொள்ளும் தனி நபர்கள் சொந்தம் கொண்டாட முடியும் . இது வினோதம் தானே .

அரசியலுக்கு இன்று வருவேன் நாளை வருவேன் என சொல்லும் சிலர். அரசியலில் இறங்கி விட்டேன் என்று உரைக்கும் சிலர்.

யார் யாரோ பேசுகிறார்கள் . என்ன என்னவோ அறிக்கை விடுகிறார்கள் . அத்தனையும் விவாதங்களாகிறது
இது என்ன அரசியலா ஆட்சியா திரைபடமா தொடர்கதையா த்ரில்லர் கதையா என்று புரியாமலே தங்கள் வாழ்க்கை தான் இந்த ஆட்டத்தின் விளையாட்டுக்களம் என்பதை அறிந்தும் அறியாமலும் சுவாரஸ்யமான வாசகர்களாய் தமிழ் மக்கள் !

அரசியலுக்கு வேறு அர்த்தம் கற்பித்து விட்ட அற்ப பதர்களின் புதிரான ஆட்சிக்குள் தமிழகம் இன்று !! தந்திரக்கார அரசியல் வாதிகளின் நானா நீயா என்ற சதுரங்க ஆட்டத்தில் வீழ்த்தப்பட்டு சிதறும் சிறு காய்களைப போல நாம்

எழுதியவர் : சஹாயா (8-Oct-17, 9:40 pm)
பார்வை : 416

மேலே