என்னோடு கடிகாரத்தின்தோல்வி

இந்த நிமிடம்
இதே நொடிகள்
சில நூற்றாண்டுகள்
தொடரட்டுமே!
கடிகாரங்களுக்கும் சிறிது
ஓய்வு தரலாமடி
நீயும் நானும்!
நேர்காணும் காலங்களில்....
அள்ளாமல் கொள்ளாமல்
இரைக்காமல்
முழுதாய் என்னுள் நிறைக்க
எப்படிதானடி ? கற்றாய்
உன் சிரிப்பை....!
நீ!நீயேதானடி..!
திரும்பி திரும்பி
பார்க்கையில்...
கரைவது வெறும்
காலம் மட்டுமா?
எனக்கும் இருதயமுண்டு
பெண்ணே...!
கொதித்து
வண்ண வண்ணமாய்
தீ! பிழம்புகள் உதிர்க்கும்
வானவில்லும் தருகிறாய்
பாரா முகத்தில்....
இருவரும்
எதிர் எதிர் திசையில்
நிச்சயமாக
காலத்தின் தோல்வியே!
காதல் மட்டும் என்னுள்
பவித்ரமான கலையாக...!
இயலாமை ஏளன
நகைப்போடு.....

எழுதியவர் : சுரேஷ் குமார் (10-Oct-17, 12:06 am)
பார்வை : 99

மேலே