என்னை எரிக்கும் தீ பந்தங்கள்

மண்ணுக்குள்ளே தான் பிடித்தவரின் கண்ணாம்பூச்சியா
அவர்களை கண்ணில் காண நாமும் உள்ளே செல்வதுதான் கடைசி முயற்சியா
மறக்க முடியாதவர்கள் முகங்கள் மறைக்கத்தான் கொல்லி இடும் தீ பந்தங்களா
எனக்கான உயிரை தானம் கொடுத்த தாய் தந்தையரை
கொல்லி இட்டு தியாகம் செய்யும் மனிதம் ஒரு பிறப்பா....
இவர்களால் வரம்பெற்ற என் நாள்.....
என் கரம் இடும் கொல்லியில் நூறு மடங்காக
சாபம் பெரும் உணர்வு என் ஆன்மாவுக்கு
என் ஒருவனின் கண்ணீர் போதவில்லை
அம்மா உன் மேனியை தீ பிழம்புகள் எரிக்கையில்.
தோளில் எனக்காக பாரம் தங்கிய தந்தையை எரிக்க
தோளில் பானை சுமந்தபடி பானையில் இருந்து சிந்தும் தண்ணீர் என்னையே எரிக்கின்றது அப்பா!!!

எழுதியவர் : rajesh (15-Oct-17, 3:45 pm)
பார்வை : 660

மேலே