துளைத்தோம் தவிப்போம்
உச்சி வெயில் பட்டு ஊத்தெடுகும் தலைமயிரு..
மேழி புடிச்சகையில் செங்காப்பு வைரகல்லு....
விவசாயி வேர்வ பட்டே விளைஞ்சது பொன்வயலு...
காளைகளின் பாதம் பட்டே கரஞ்சது தாய்மனசு...
பழையகாஞ்சி உண்டுதானே பகல் பூராம் பாடுபட்டோம்
கட்டித்தர புழுதியிலதான தூக்கம்கொண்டோம்
அன்புக்கு இலக்கனம பொஞ்சாதி கூடநின்னா
தைரியமும் தான்வருது பாசம்தானே வீரமுனேன்
ஆத்து தண்ணி பொங்கி வாய்கா வழிதேடி
வயலும் நிறைந்தது போகங்கள் செழித்தது..
வானம் கருமையிட்டாள் மண்ணில் நீர்பெருகும்
வருணன் மேலமிட பாமரனின் கொண்டாட்டம்.....
சாமை, வரகு, கம்பு
உண்டோம் வலிமைகொண்டோம்
பொங்கலில் மட்டும்தானே அரிசியை பொங்கவிட்டோம்
ஆத்து மணல் தொட்டால் நீரும் சுரக்குமடா
ஆயிரம் அடி தொண்ட அவசியல் இல்லையன்று....
களிமண் வீடுகள்தான் கனவுகள் சுமந்தது
பலிகள் கேட்டதில்லை இமைபோல் காத்தது
காளையுடன் விளையாட்டு
நாட்டுபுற தாலாட்டு
மாடுப்பால் குடித்துதனே நோய்களுக்கு இட்டோம்பபூட்டு
சாணம்தான் தடுப்பூசி
வேப்பிலை நோய்விரட்டும்
மஞ்சள் கவசமாகும்
தானியங்கள் வலிமையிடும்
தமிழனின் அடையலாம் தலைகிழாய் போனதேனோ
மேழியிணை பிடிக்கவில்லை உழவன் நிலைக்கவில்லை.....