சாக்கடை மனங்கள்

ஒவ்வொரு விடயங்களிலும் அரசாங்கத்திடம் கையெந்தும் மக்கள்...
பிச்சைக்காரனும் வாங்குகிறான்..
பணக்காரனும் வாங்குகிறான் உலுத்துப் போன இலவச அரிசியை...

இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் வரை இந்த உலகம் மிக துன்பங்களால் மட்டுமே நிறைந்திருக்கும்...
உழைக்காத காசு உடலில் ஒட்டுவதில்லை...

தனக்காக உழைக்க ஒரு கூலி வைத்து, உழைப்பிற்கேத்த ஊதியம் வழங்காமல், சுயநல சிந்துக்குள் சிக்கித் தவிக்கும் கருமிகளுக்கெல்லாம் உடலெங்கும் உள்ள நோய்களின் பட்டியல் நிரம்பி வழியுமே...

நெருப்பை கீழ் நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கித் தான் எரியும்...
அதிகார ஆடம்பரம் தேடும் உலகில் நாமெல்லாம் ஒரு குடும்பமென்ற உணர்வு எப்போதோ செத்துவிட்டது...

இப்போது நடமாடுவதெல்லாம் பணம் தேடும் பிணங்கள்...

அண்ணே என்றழைத்தால் தம்பி என்றழைத்தவரெல்லாம் அந்த காலம்...
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்பதே இந்தக் காலம்...

அன்பு நிலை தவறிவிட்டோம்.
அன்பைத் தவறவிட்டோம்..
இதயத்தை ஆசைக்குள் துடிக்கவிட்டோம்...
மனிதநேயமென்பதை மறந்துவிட்டோம்...
சகோதரி என்றழைப்பது கூட சந்தேகத்திற்கு இடம் தந்தால் மனிதர்களின் மனமெங்கும் நாற்றமெடுக்கும் ஆசைகளே அதிகமுள்ளதென்று அர்த்தம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Oct-17, 8:58 am)
Tanglish : sakkadai manangal
பார்வை : 1360

மேலே