தாய்

நரம்புகள் புடைத்து
இடுப்பு எலும்பு கழண்டு
கண்களில் நீர் தெறித்து
அலறலில் குரல் கிழிந்து

உச்சபட்ச வலியில் மரணத்தின் உச்சத்தை தொட்டு
செத்தேவிட்டோமென்று செல்கள் அழுது
இனி ஒரு பிள்ளை வேண்டாமென்று
ஆங்காரத்தில் சிந்தனை உடைந்து

செவியின் சவ்வுகள் ஆக்ரோஷத்தில் அடைத்து
சிறுதுளையைப் பிய்த்து
அடிவயிறு மரண பீதியில் மாய்ந்து
குடல்கள் சுருட்டி விழிகள் இருட்டி

வியர்வை பூத்து இமைகள் வியர்த்து
மெல்லிய குரலில் ஒர் அழுகையைக் கேட்க
இருதயமது அன்னிச்சையாய் இளகி விட
பிசு பிசு என்று ஒரு உடல் என்னிடம் வர

வலியெல்லாம் மறந்து
களைப்பெல்லாம் களைந்து;
உள்ளமது பூரித்து
முகம் முழுவதும் மகிழ்ச்சியில் தாய்!!!

எழுதியவர் : srk2581 (21-Oct-17, 10:57 pm)
Tanglish : thaay
பார்வை : 61

மேலே