யார் குற்றவாளி

யார் குற்றவாளி?

ஆண்:- பெண்களே! பெண்களே! உண்மையை பேசி பழகுங்களே...
அதுவே உயர்வை தரும்...

பெண்:- ஆண்களே! ஆண்களே! பொய்களின் பிடியில் சிக்காதீர்களே...
அதுவே பகுத்தறிவின் அடையாளம்...

ஆண்:- காதலென்றாள் அவள்..
பார்க்கும் இடமெல்லாம் பல்லிளித்தாள் அவள்...
அவளை நம்பி போனேன்...
அவன் யாரென்று தெரியாது, திருட வந்திருக்கிறான் திருடனென்று மாட்டிவிட்டாள் அவள் அப்பனிடம்..

பெண்:- காதலென்று பூங்கொத்தை நீட்டினான்..
நல்லவனென்று நம்பினேன்...
பூங்கொத்தின் வாசம் போகல...
போனவன் இன்னும் திரும்பல...

ஆண்:- ஆண்களெல்லாம் படுகுழியில் விழுவது பெண்களாலே...

பெண்:- பெண்களெல்லாம் கண்ணீரில் வாழ்வது ஆண்களாலே...

ஆண்:- ஆண்களே! ஆண்களே! பெண்ணை நம்பாதீங்க. அவள் முகமெல்லாம் விஷம்..

பெண்:- பெண்களே! பெண்களே! ஆணை நம்பாதீங்க.. அவன் உடம்பெல்லாம் விஷம்...

பொறுமையிழந்த நான்:-
போதும். நிறுத்துங்க.
ஆண்ணும் குற்றவாளி.
பெண்ணும் குற்றவாளி.
இதற்கான காரணம் தன்னில் தேடி கொல்லாததாலே...
சிறந்ததை நாட, சலுகைகள் பெற வாழ்க்கையொன்று ஜவுளிக்கடையல்ல...
பிடித்தால் பிடியுங்கள் உடும்பு பிடி...
மரணம் தாண்டி கூட வரும் நிரந்தரம் தேடுங்கள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Oct-17, 11:20 am)
Tanglish : yaar kutravaali
பார்வை : 2177

மேலே