காதல் எனும் பாடம்

கல்லூரி வாழ்வில்
ஆணும் பெண்ணும் காதல்
கொள்வது தவறில்லை...
இளமை பருவத்தில் காதல்
செய்ய உகந்த பருவம்...

இளமை பருவம் பள்ளி
பாடங்களை மட்டும் விதைக்கும்
வயதல்ல காதல் எனும்
பாடமும் தான்... காதலும் ஒரு
பாடம் தான்... சிலர் தேர்ச்சி பெறுவர்...
சிலர் தோல்வி அடைவர்... அதுவே
வாழ்க்கை என்று நம்பி பள்ளிபாடத்தில்
கோட்டை விடுவதே தவறு... காதலும்
நீ படிக்கும் பாடத்தில் ஒன்று
என்பதனை மறவாதே... ஆணுக்கு பெண்ணிடமோ
பெண்ணுக்கு ஆணிடமோ காதல்
வந்தால் உடனே சொல்லிவிடு
பாரம் குறையும்... அதிஷ்டம் இருந்தால்
காதல் செய்... இலையேல் நட்பாய்
இரு... எறும்பு ஊற கல்லும்
தேயும்... இதயம் காதல் கொள்ளாதோ?
அவளையே நினைத்து உருகாதே
ஒருகால் காதல் கல்யாணத்தில்
முடியவில்லையென்று... அதுவும் ஒரு சுகம்தான்...

எழுதியவர் : பவநி (24-Oct-17, 1:07 pm)
பார்வை : 118

மேலே