கடவுள்

உண்மை உருவமின்றி
ஊடுருவும் ஒருவனை
இந்த உலகம் அழைக்கின்றது
கடவுள் என்று!
அவனை கண்கள் காணும் முன்பே
காலம் உணர்த்தி விட்டது
கடவுள் யார் என்று!!,

இவ்வாறு;

பண்புகளை சில நேரம் சோதிக்க
பணத்தை படைத்தான்,

பாசத்தை சில நேரம் சோதிக்க
அன்பை படைத்தான்,

இதயம் என்பதை சோதிக்க
இரக்கத்தை படைத்தான்,

உறவின் ஆழத்தை சோதிக்க
பிரிவை படைத்த்ன்,

நிலை மாறும் நிழலை சோதிக்க
உடலை படைத்தான்,

உள்ளத்தை சோதிக்க
வெறுப்பை படைத்தான்,
அவனின் படைப்புகள் அணைத்தையும்
அறிந்து நானும் வியந்தேன்!
இத்தனை படைத்த அவன்
இதனை
எங்கு படித்தான்?!,

ஒன்றும் இல்லா வாழ்விற்க்கு
ஒவ்வொறு முறையும்
பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறான்!!

திரையில்லா
ஒரு திரையரங்கில்
தினம் தினம்
பது காவியம் படைப்பவன்
ஏன்
சில நேரங்களில்
சிலதை பறித்துக் கொள்கிறான்?,

பாதைகள் இல்லாத
சிலவழியில்
பயணத்தை படைக்கிறான்!,

உரிமை இல்லாத
சில உடல்களில்
உறவுகளை படைத்தான்!!,

விருப்பம் போல் அவன்
படைத்து விட்டுச் சென்றா(ல்)ன்
இங்கு விரும்பி தவிப்பது
யார் யாரோ தானே!!!,

வீணானவன் என விலகியவனின்
விரல்களின் மத்தியில்
பேனாவை வைத்தவன்
அதற்க்கு விதி என்று
எதற்க்கு பெயர் வைத்தான்?!,

பலரின் இரகசியத்தை
அவன் அறிகிறான்!
அதன் அவசியத்தை
அறிய வைக்கிறான்!!
இருந்தும் அதனை அவனே
அபகரித்துக்கொள்கிறான்!!!,
இது ஆசையா?
இல்லை
அனுபவமா?
என எண்ணி எண்ணி
இன்ணும் எதிர்ப்பார்க்க
வாழ்வின் சுவாரசியத்தை
அழகாக மாற்றுகிறான்!!!,

வாழ்வில் சில வடிவங்களை
வடிவமைத்தவன்
வழக்கமாக
சில குறைகளை படைக்கிறான்!
குறையாக படைத்த போதும்
அதில்
சில குண அதிசயங்களை படைக்கிறான்!,

வெளிச்சத்தை படைத்தவன்
அதனை பார்க்க
விடியும் வரை
காத்திருக்க வைத்தான்!,

இன்பமான இரவை படைத்தவன்
அதனை காண
வெளிச்சத்தின் இறுதி வரை
காத்திருக்க வைத்தான்!!,

தண்ணீரில் தோனியே
கறையேறும் வரை
காத்திருக்கும் போது
கண்ணீரில் வாழும் மனிதன்
காத்திருக்க வேண்டாமா?!,

முழு உடல் நடக்க
மூச்சை படைத்தவன்
வாழ்வில் முண்ணேற
முயற்சியையும் படைத்திருக்கின்றான்!!,

எது ஒன்று
உள்ளது என்ற போதும்
அதற்க்கு
எல்லை ஒன்று உண்டு
எனவே இறைவன் அவன்
என்றும் எல்லையில்
காத்துக்கொண்டிருக்கிறான்!!,

இத்தனை இருந்த போதும்
அவன் மீது எனக்கு
நம்பிக்கை இல்லை!
காரணம்
என் தம்பிக்கையே அவனாக
இருக்கும் போது
எதற்காக அவனை "நான்"
நம்ப வேண்டும்???!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-Oct-17, 7:37 pm)
Tanglish : kadavul
பார்வை : 160

மேலே