மீனும் நானும்

நீரில்லா மீன் போலதான்.....
நீ இல்லாமல் நானும் .....

நீர் குறைந்ததால் மீனில்லை....
உன் அன்பு குறைந்ததால் நான் இல்லை......

அழகான ஆழமான நீரில் நீந்தித் திரிந்த மீன்...
நீர் வற்றப்போனதில் சிறு நிமிடத்திற்குள்ளே துடிதுடித்து
உயிரிழந்து போனது....

அது போலதான் நானும் உன் அன்பின் ஆழத்தில்....., உன் மூச்சுக்காற்றையே சுவாசித்துக்ககொண்டு நீந்திக்கொண்டிருந்தேன்...
உன் அன்பு வற்றிப்போனதில்....
மீனைப்போல சட்டென இறந்து போகமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இன்னும்..... ஒரு ஜடமாக

எழுதியவர் : ஜதுஷினி (27-Oct-17, 1:33 pm)
Tanglish : meenum naanum
பார்வை : 126

மேலே