புதுமைகள் படைப்பாய் ஆரணங்கே

விண்ணோடு முகிலாகி
முகிலோடு நிலவாகி
நிலவோடு ஒளியாகி
ஒளியோடு உயிராகி
உயிரோடு உறவாகி
உறவோடு மெய் கலந்து
மெய்யோடு உணர் கலந்து
உண்ர்வோடு தமிழ் கலந்து
தமிழோடு இசை கலந்து
இசையோடு நசை கலந்து
நசையோடு கவி புனைந்து
புதுமை படைக்கும் பெண்ணாக
உலவிடுவாய் ஆரணங்கே...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (28-Oct-17, 9:31 pm)
பார்வை : 58

மேலே