தெய்வ திருமகன்

தேவர் அய்யா தெய்வம் அய்யா...
தேசம் காத்த தலைவர் அய்யா...
தேடி வந்தேன் உன்னை பார்க்க...
பாடி வணங்குறேன் அருள் கிடைக்க...

மன்னில் வாழ்ந்த நாட்களெல்லாம்
மக்களுக்காக வாழ்ந்து விட்டு
மலர்ந்த நாளில் மறைந்து போன
மனித உருவில் தெய்வம் நீங்கள்..!

மது மாது முற்றிலும் துறந்து
மதம் சாதி அனைத்தையும் கடந்து
ஆன்மிகம் என்றால் என்னவென்று
ஆதரமாக இருந்தவர் நீங்கள்..!

அடிமையான அன்னை தேசத்தை
அனல் பறக்கும் தன் பேச்சினால்
வெகுண்டெலுந்த வெள்ளம் போல
வெள்ளையனுக்கெதிராய் போரட வைத்தவர் நீங்கள்..!

தேசத்தை ஒரு கண்ணாகவும்
தெய்வீகத்தை மறு கண்ணாகவும்
காலன் வந்து அழைக்கும் வரையிலும்
கட்டிக்காத்த காவலன் நீங்கள்..!

வீரத்தின் பெருக்கிடமாக
விவேகத்தின் அறிவொளியாக
தலைவன் என்ற இலக்கணத்திற்க்கு
தகுதியுள்ள ஆண்மகன் நீங்கள்..!

உங்களுக்கான இந்நாளில்
உங்களே போற்றி வணங்க
உள்ளத்தில் பெருமைகொள்கிறேன் அய்யா..!

ஜெய்ஹிந்த்..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (30-Oct-17, 12:07 am)
பார்வை : 529

மேலே