அன்பின் எச்சம்
இதயத்தின் நெகிழ்வை சொல்வது
இங்கு
இதயத்தின் வலியை இதயத்தால் உணர்வது
உதடுகளின் ஸ்பரிசத்தால்
வார்த்தைகளால் மருந்திடுவது
வெறும் வார்த்தைகளுக்காக வரவில்லை உன்
வேதனை சுமையை சிறிதாவது இறக்கிவைக்க
வீடு வாசல் விட்டு வந்து அந்த
வலியின் வீச்சை குறைக்க முற்படுவது
காடு செல்லும் சவ ஊர்வலத்தில்
கால் கடுக்க போவதும்
கண்ணீர் சிந்தி இதயம் நெகிழ்வதும்
மண்ணில் துயரின் வேகத்தை குறைக்கத்தான்
இது வெற்று பாரம்பர்யம் அல்ல
இதயத்தின் இதமான வருடல்
துயரின் பள்ளத்தில் உள்ளவரை
துவளாமல் மேலே கொண்டுவருவது
உடைந்த இதயத்தை அன்பால் ஒன்று சேர்ப்பது
அடைபட்டு போன அன்பின் வழியை அதே
அன்பால் திறப்பது
அதனால் இறப்பை விசாரித்தல்
வெற்று மரபல்ல –அன்பின் எச்சம்
மானுட பண்பின் உச்சம்