விடிகின்ற பொழுதின் கொடுமையை என்சொல்வேன்

உள்மூச்சு எனதாக
வெளிமூச்சு உனதாக
இணைந்த என்கனவை கொன்று
விடிகின்ற பொழுதின்
கொடுமையை என்சொல்வேன்?

ராத்திரி முழுதும்
பூத்திருந்த உனைப்பிரித்த
விடிகின்ற பொழுதின்
கொடுமையை என்சொல்வேன்?

தொலைந்த என்கனா கன்னியே..
திறந்த என்கண்களை
கலைந்த என்போர்வை
கலாய்க்குது முதலில்...!

ஜன்னலை திறந்தேன்
தென்றலும் தீண்டலை...!
தினசரி எடுத்தேன்
தூத்தேறி என்றது...!

முகம்பார்க்க முன்னின்றேன்...
மூடிக்கொண்டது கண்ணாடி...!
தண்ணீரை திறந்தேன்
வெந்நீராய் பாய்ந்தது...!

எனைக்கண்ட ஏளனத்தில்
ஏனோஎரிகிறான் சூரியன்?
நீயல்லா என்னை
நிழலும்ஏன் வெறுக்கிறான்?

வெதும்பியே திரும்பினேன்
விளக்கினை அணைத்தேன்
பகலை இரவாக்கி-உன்
பரிசத்தை உணர்ந்திட...!

பாவைநீ பூப்பாயென-கண்
பாவையை மூடினேன்
போயென்ன அவசரமென
போதனைகள் தந்தாய்... !

இரக்கம் இல்லையோ
மரமோ கடவுள்?
இறக்குமோ என்னுயிர்-நீ
இல்லாத தனிமையில்..!

ராத்திரி முழுதும்
பூத்திருந்த உனைப்பிரித்த
விடிந்த இப்பொழுதின்
கொடுமையை என்சொல்வேன்?...

எழுதியவர் : காசி.தங்கராசு (3-Nov-17, 8:13 pm)
பார்வை : 88

மேலே