Elmai

ஏழை
நீ
வறுமையின் வாடிக்கையாளர்
உன்
வாடிய கண்கள்
வறுமையின் கதை
சொல்கின்றன
உன் வறுமை
கதையினை
எழுதியவன்
ஒரு
பணக்காரன்
கல்வி கற்கும்
வயதில்
கல்லுடைக்கும்
உன்குழந்தை
ஒரு
கூலி தொழிலாளி
நீ
ஏழையாக பிறந்தது
உன் தவறில்லை
உன்னை
ஏழையாகபிறப்பித்ததுதான்
தவறு

By😎😎 Aj....... 😊😊

எழுதியவர் : அஜி (9-Nov-17, 8:28 pm)
Tanglish : kavithai
பார்வை : 326

மேலே