என் அம்மா

அம்மா என்ற வார்த்தையில்
அகிலம் அடங்குதடி.
பாசத்தின் அகராதி நீயடி,
கடவுளின் கருணை நீயடி,
பெண்மையின் சிறப்பு நீயடி,
புரியாத புதுமை நீயடி,
புனிதத்தின் பிறப்பிடம் நீயடி,
பொறுமையின் தலைமை பீடம் நீயடி,
பண்பின் பல்கலை கழகம் நீயடி,
பிஞ்சு கையின் பிடிமானம் நீயடி ,
பிள்ளைகளின் ஆசான் நீயடி,
குடும்பத்தின் குணவதி நீயடி,
தியாகத்தின் திருபீடம் நீயடி,
திருவருள் தரும் தெய்வம் நீயடி,
அதுவே என் அம்மா.
தாயன்பு
கைதியை கட்டி போடும் அன்பை
கண்டதும் உன்னிடம்தான்
கண்ணே என்ற போது - என்
உள்ளத்திலே அமுதம் சுரக்கின்றது.
கருவறையில் இருக்கும் போதே
இதயவறை தந்தாய் - இனியவளே
இன்றும் இறைவனிடம் எனக்காய்
பிரார்த்திக்க மறக்கவில்லை நீ
தாயே இதுவரை - உன்
உள்ளம் குளிர எதுவும் செய்யவில்லை
இன்றும் என்னை எறிந்து விடவில்லை,
இதயத்தில் இருந்து