சொன்னார்கள்

வாழ்க்கையில்
வெற்றி தோல்வி சகஜம் என்பார்கள்!
அது என்ன காதலி
விதிக்கு வெற்றியும்
எனக்குத் தோல்வியும்
எப்போதும் சகஜம் ஆகிவிட்டது!
காதலுக்கு
கண்ணில்லை என்பார்கள்!
உன் கண்ணுக்கு மட்டும் ஏன்
காதலே இல்லை?
சொர்க்கத்திற்கு
சுருக்கு வழி காதலாம்!
என் சொர்க்கத்திற்கு
“சுருக்கு” வழியா?
இதுவும் கூட
இட ஒதுக்கீட்டு பிரச்சினையால்
உருவான தீக்குளிப்பு!
உன் மனதில்
இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையால்
உருவான தீக்குளிப்பு!
மௌனம் சம்மதமாம்!
என்
நிரந்தர மௌனம்
உனக்கு சம்மதமா?
உனக்குத் தெரியுமா காதலி?
என் மனசுக்குள் நீ
அடித்த ஆணிகளில் கூட
நான் உன் புகைப்படத்தைத்தான்
மாட்டி வைத்திருக்கிறேன்!
பொறுத்தார் பூமியாள்வார்!
காதலில் பொறுத்து பொறுத்து
இன்று
ஆறடி பூமியை
ஆளப் போகிறேன்!
என்
கல்லறையேனும்
உன்
காதலைப் பார்க்கட்டும்!