ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யா
************

அவள் உண்டதையேதான்
நானும் உண்டேன்
என் போலவே பேசினாள்
அவள் போலவே கேட்டுக் கொண்டேன்
எதிர் எதிர் அமர்ந்திருந்தோம்
எதிர் எதிரேவும் அமர்ந்திருந்தோம்
தனித்த கிறுக்குத்தனம் அவளெங்கும்
சப்த மௌனங்கள் என் பங்கும்
பெண்மையின் தூரத்தில் நட்சத்திரம் அவள்
மென்மைக்குள் நானும் சித்திரத் துகள்
கோபம் வந்தால் தனித்திருப்பேன்
பயணத்தில் குதித்திருப்பேன்
என்றாள்
இனி கோபம் வந்தால் நினைத்திருப்பேன்
என்றேன்
ஊட்டி வரை சென்று மூன்று தேநீர்
குடித்து திரும்பி விட்டேன் என்றாள்
நான்காவது தேனீர்க்கு
இனி நானும் கை நீட்டலாம்
ஆன்மா பேசுவதைக் கண்டேன்
அன்பே சுவாசம் என கொண்டேன்
நான் வைத்த பெயர் சொன்னதும்
புது வண்ண அலை
சிறு புன்னகை அவள் செய்ததும்
நான் பெண் நிலை
ஒவ்வொரு வளைவிலும்
பிருந்தாவனம் அவளுக்கு
தூர தேசங்கள் இவள் போல தோழிகளற்று
சாத்தியமில்லை எனக்கு...!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (19-Nov-17, 10:34 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 1216

மேலே