நினைவுப்பாதை- கவிதை

என் நினைவுப்பாதையில்
நித்தமும் பயணம்
என் பாதையின் துவக்கம்
எதுவென்று அறிய…
நடந்த சம்பவங்கள்தான்
நட்டுவைத்த கல்லாய்
நெடுகிலும் கிடக்கு..
குழந்தைப்பருவத்தின்
நினைவுகள், அங்கும் இங்கும்
வரிசை மாறி சிதறிக்கிடக்கு…
எது முன்னே எது பின்னே
என்ற குழப்பம் கூட அடிக்கடி வருது..
இருந்தும் நினைவே
நீதான் பொக்கிஷம் எனக்கு!
என் தனிமையில்
துணையே என்; நினைவகள் தானே.
நீ மட்டும்
இல்லையென்றால் நான்
வெறுமையின் பிடியில் அல்லவா
அகப்பட்டுச் சாவேன்!

எழுதியவர் : கோவிந்தராஜன் (21-Nov-17, 10:23 pm)
பார்வை : 134

மேலே