கடந்த காதல்
எங்கிருந்தாலும்...
எவ்வளுவு உயரம்...
சென்றாலும்..
எத்தனை ஆண்டுகள்
கடந்தாலும்...
வயதே முதிர்ந்து
தளர்ந்தாலும்..
.முதல் காதலை
நினைத்த மாத்திரத்தில்
இன்பம் பெருகும்
நினைவோட்டம்...
அவளை சுற்றி ஓடும்..
அவள் அழகை
புகழ்ந்து பாடும்
அவளுடன் இருந்த
அழகிய தருணத்தை
நினைத்து ஏங்கும்..
கல்யாணம் ஆகி
கணவனுடன் வாழ்ந்தாலும்
தவறு என்று தெரிந்தும்
அவள் என்னவளே
என்று நினைக்க தூண்டும்...
அவள் நோக்கி நடக்க
தோன்றும்...