எங்கே தொடக்கமோ,அங்கேயே முடிவும்

வரமொன்று கேட்டேன்
இறையிடம்,
வரமாக வந்தார் தாயாக!!!
வரமொன்று கேட்டேன்
தாயிடம்,
வரமாக மாறினாள் நல்தோழியாக!!!
வரமொன்று கேட்டேன்
தோழியிடம் ,
வரமாக தந்தாள்,
குழந்தைஅன்பை.....
வரமொன்று கேட்டேன்
குழந்தையிடம்,
அழகிய சிரிப்பால்
வரமாக மாறினாள் இறையாக....!!!!!