வெட்கப்படும் ஓவியம்
உன்னை வரைந்த ஓவியமும் வெட்கப்படுகிறது,
"நானும் என்ன ஒரு அழகு!"யென்று.
தீட்டாத வண்ணங்கள் துயரப்படுகின்றன,
உனக்கு நிறம் கொடுக்கவில்லையென்று.
தொடாத தூரிகைகள் துன்பப்படுகிறது,
தீண்டவில்லையே உன் உருவத்தையென்று.
வர்ணிக்கமுடியாத வார்த்தைகள், ஒளிகின்றன,
உன் வளமையைப் பார்த்து,
கற்பனைகள் களையிழந்து போகின்றது,
உன் ஓவியத்தை பார்த்து.
காவியங்களும் பல வரும்
உன் ஓவியத்தின் வெட்கத்தை பார்த்து.