பொன்னி
பொன்னி
மென்மையான கவிதைகளை காட்சியாய் உணர்த்தும் புத்தகம்
- என்னவள் பொன்னி
வெண்மையான காகிதத்தின் கருமைநிற அழகு எழுத்துக்கள்
- அவளது கண்கள்
முற்றுப் பெறும் இடத்தில் மலர்கின்ற அழகு வரிகள்
- அவளது இதழ்கள்
ஆக்ஸிஜன் போல் எங்கும் பரவியிருக்கும் அழகு தமிழ் சொற்கள்
- அவளது மூச்சுக்கள்
எதுகை மோனை நயத்துடன் முடியும் அழகு வாா்த்தைகள்
- அவளது பேச்சுக்கள்
காவியமாய் கண்முன் நிறுத்தும் வெவ்வேறு வா்ணனைகள்
- அவளது முகபாவணைகள்
வாசிக்க வாசிக்க காகிதம் மணக்கும் பக்கங்கள்
- அவளது அவிழ்ந்த கூந்தல்கள்
படித்து முடித்து மீண்டும் படிக்கத் தூண்டும் பண்புகள்
- அவளது வாழ்க்கை பண்புகள்
- சஜூ