சின்னராசா

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான் மூத்த பையன். என் பெயர் பெரியராசா. கல்லூரியில் என்னை “பெரி” என்று சுருக்கமாக கூப்பிடுவார்கள். எனக்கு அடுத்தது என் சகோதரி செல்வி. குடும்பத்தில் கடைக்குட்டி என் தம்பி சின்னராசா. அவனை வீட்டில் சின்னா என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம் . கல்லூரியிலும் அவனை “சின்னா” என்று அழைப்பார்கள் என் தம்பி கட்டையன். உயரத்தில் ஐயிந்து அடி ஐயிந்து அங்குலம். என்னை விட ஐயிந்து அங்குலம் குறைவு. கணக்குப் போட்டு என் உயரத்தைக் கணித்துக் கொள்ளுங்கள் உயரத்தில் மட்டுமல்ல வயசிலும் என் தம்பிக்கும் எனக்கும் ஐயிந்து வருஷம் வித்தியாசம்
“பார்த்தாயா செல்வராசு, உண்டை சின்னவன் சின்னராசா பிறந்தது அவிட்டத்தில். ஒரு குழந்தை அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையும் பொன் பானையாகும்” என்று ஜோதிடத்தில் கரை கண்ட என் அப்பம்மா சொன்னாlள்.
அவன் பிறந்த அடுத்த மாதமே அப்பா வேலை செய்த யாழ்ப்பாணத்து மக்கள் வங்கியில் அவருக்கு மனேஜராக பதவி உயர்வு கிடைத்தது , அதற்கு அடுத்த மாதம் அவரின் சகோதரிக்கு திருமணம் முற்றாகிற்று. கோர்ட்டில் பல காலம் நிலுவையில் இருந்த நாவற்குளி பத்து பரப்பு வயல் காணி வழக்கு அப்பாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதுமட்டுமல்ல அப்பாவின் சகோதரர் கனகராசா புலம் பெயர்ந்து குடும்பத்தொடு கனடா சென்றார். இந்த சம்பவங்கள் சின்னாவை குடும்பத்தில் உச்சத்தில் கொண்டு போய் வைத்தது. எல்லோரும் அவனுக்கு ஒரு தனி மரியாதை. வீட்டில் அவன் செல்லப்பிள்ளை. அவன் எந்தத் தவறு செய்தாலும் அம்மாவும் அப்பாவும் அவனை ஏன் என்று தட்டிக் கேட்க மாட்டார்கள்

கனகராசா சித்தப்பா கணினி துறையில் பட்டம் பெற்ற மென்பொருள் பொறியாளர் (Software Engineer) . அவருக்கு கனடாவில் ஒரு அமெரிக்க கொம்பனி ஒன்றில் நல்ல சம்பளத்தில் உத்தியோகம் கிடைத்தது. கனகராசா சித்தப்பாவுக்கு பிள்ளைகள் இல்லை என்ற குறை மட்டுமே. சித்தி ஒரு குடும்ப டாக்டர். அவர்களுக்கு செல்வத்துக்கு குறைவில்லை. மார்க்கம், ஸ்காபரோ ஆகிய இடங்களில் இரண்டு வீடுகள். இருவருக்கும் BMW கார் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்கள். இருவருக்கும் BMW கார்கள் . என்மேலும், என் தம்பி சின்னராசாமேலும் தங்கச்சி செல்விமேலும் அதிக அன்பு வைத்திருந்தார்கள் சித்தப்பவும் சித்தியும் . அவர் லீவில் சித்தியோடு யாழ்ப்பாணம் வந்தால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்
அவரின் படிப்புக்கு என் அப்பா செய்த உதவியை அவர் மறக்கவில்லை. எங்கள் படிப்புக்கும், செலவுக்கும் மாதம் மாதம் தவறாமல் பணம் எங்களுக்கு அனுப்புவார். என் தம்பியும் கல்லூரிக்கு போய் வர டூ வீலர் வாங்கவும், எனக்கு கணினி ஓன்று வாங்கவும் காசு அனுப்பினார். அப்பா எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. எனக்கு வந்த பணத்தை என் பல்கலைக்கழகப் படிப்புக்கு தேவை படும் என்று அப்பாவிடம் கொடுத்துவிட்டேன். என் தம்பி பணம் வந்து இரு கிழமையில் டூ வீலர் வாங்கிவிட்டான். செல்விக்கு பதக்கம் சங்கிலி வாங்க அனுப்பிய பணம் அவளின் திருமணத்துக்கு உதவும் என்று அப்பா பணத்தை வாங்கி அவளின் வங்கிக் கணக்கில் பாங்கில் போட்டு விட்டார்..
என் தம்பிக்கு படிப்பு என்றால் சுத்த சூனியம். அவன் கையில் காசு இருப்பதால் அவனுக்கு கூட்டாளிகள் பலர் . கிழமைக்கு ஒரு உடுப்பு. அடிக்கடி வெளியில் நண்பர்களோடு உணவு . கல்லூரி முடிந்து தாமதித்தே வீட்டுக்கு வருவான். கல்லூரியில் அவனுக்கு நல்ல பெயர் கிடையாது. மாணவிகளோடு பல தடவை தகாத முறையில் நடந்து, ப்ரின்சிபல் அவனை எச்சரிக்கை செய்தார். சின்னாவின் குழப்படி தாங்க முடியாமல் ஒரு தடவை அவனைப் பற்றி பேச வேண்டும் என் அப்பாவை கல்லூரிக்கு வரும்படி ப்ரின்சிபல் என்னிடம் சொல்லி அனுப்பினார் .

*****
“ மிஸ்டர் செல்வராசா நீர் ஒரு வங்கியில் பெரிய பதவியில் இருக்குறீர். உமது மூத்த மகன் பெரியும், மகள் செல்வியும், படிப்பில் கவனம். ஆனால் உமது கடைசி மகன் சின்னராசாவை பற்றி ஆசிரியர்கள் பல தடவை எனக்கு முறையிட்டு இருக்குறார்கள். மாணவிகளோடு தகாத முறையில் நடந்திருக்கிறான் . அதுவுமல்லாமல் அவன் தன் நான்கு கூட்டாளிகள் . ஜெகன், ராஜன். மணி , பத்மன் அவர்களோடு சேர்ந்து போதை மருந்து அருந்துவதாகவும், வியாபாரம் செய்வதாகவும் எனக்கு சிலர் வந்து சொன்னார்கள். இவர்களால் எங்கள் கல்லூரியின் பெயர் கெட்டு விடும் . தேவை இல்லாமல் சக மாணவர்களோடு சண்டைக்கு போகிறான். தங்கள் ஐந்து பேர் கொண்ட குழுவுக்கு “சின்னா” குழு என்று பெயர் வைத்து சட்ட விரோதமான செயல்களில் ஐவரும் ஈடு படுகிறார்கள். அது மல்லாமல் இன்னொரு கல்லூரியில் உள்ள மாணவிகளோடும் பிரச்சனை பட்டதாக அந்த கல்லூரி பிரின்சிபால் எனக்கு முறையிட்டார் ஒரு நாள் இவர்கள் சிறை செல்ல வேண்டி வரும். அப்படி நடந்தால் உமது குடும்பத்துக்கு அது பெரிய அவப் பெயர்”, என்றார் முழு மூச்சாக பிரின்சிபல்.
“ சேர் நீங்கள் சொல்வது எல்லாம் எனக்குத் தெரியும். என் மூத்த மகன் எனக்கு சொன்னவன் . சின்னராசா பிறந்த பின் எங்கள் குடும்பத்தில் பல நல்ல காரியங்கள் நடந்தது. அதனால் அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோம். கனடாவில் இருக்கும் என் தம்பி கனகராசா மாதம் மாதம் என் பிள்ளைகளுக்கு பணம் அனுப்புகிறான். நான் அவனுக்குப் பணம் அனுப்பவேண்டம் என்று எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கிறான் இல்லை:”
“ ஏன் அவருக்குப் பிள்ளைகள் இல்லையா “?
“ இல்லை”
“. சின்னராசாவிடம் பணம் அதிகமாக புழங்குது .நீங்கள் கொடுக்கவில்லை என்று எனக்குத் தெரியும் யார் அவ்வளவு பணம் அவனுக்கு குடுக்கிறது. அவனிடம் பணம் இருக்கிறபடியால் தானே அவனால் தன் குழுவை இயக்க முடிகிறது’?
“என் தம்பிக்கு என் பிள்ளைகள் மேல் சரியான பாசம் . இவன் சின்னராசா பிறந்து இரண்டு மாதத்தில் கனடாவுக்கு போக என் தம்பிக்கு விசா கிடைத்தது. நான் எவ்வளவோ அவனுக்கு சொல்லியும் அவன் காசு அனுப்புவதை நிறுத்துகிறான் இல்லை . என் மூத்தவனாலும் . செல்வியாலும் எனக்குப் ஒரு பிரச்கனையும் இல்லை. இவனைப் பற்றி நான் ஏற்கனவே என் நண்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாதனோடு பேசி விட்டேன். அவர், தான் சின்னா குழுவை கவனிப்பதாக உறுதி அளித்தார் . சில நாட்கள் பொறுத்து இருந்து பார்ப்போம். அவன மாறாவிட்டால் நான் என் தம்பியோடு பேசி இவனை கனாடாவுக்கு கூப்பிடும்படி சொல்லுறன்”:
:”அது நல்ல யோசனை. பிறகு அவனுக்கு பாரதூரமாக ஏதும் நடக்கக் கூடாது: என்றார் பிரின்சிபால்.
****
அன்று அம்மாவின் அறுபதாவது பிறந்த தினம். நானும் செல்வியும் மாலை நான்கு மணிக்கு வீடு திருப்ப முன், நான் என் தம்பியோடு பேசினேன்
” என்ன சின்னா இன்டைக்கு அம்மாவின் அறுபதாவது பிறந்த தினம் . தெரியும் தானே ? சொந்தக்காரர் எல்லோரும் கொண்டாட வீட்டுக்கு வருகினம் நானும் செல்வியும் இப்பவே வீட்டுக்கு போகிறம். நீயும் எங்களோடு வாவன் “ நான் அவனை கேட்டேன்
“ பெரி அண்ணா, நீயும் செல்வியும் வீட்டுக்குப் போங்கோ. எனக்கு ஒரு முக்கிய காரியம் செய்ய இருக்கு அதை முடிச்சுப் போட்டு வாறன். அம்மா கேக் வெட்ட முன் வீட்டில் இருப்பன் என்று அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொல்லும்” என்றான் சின்னராசு
அவனை எதிர்த்து என்னால் பதில் சொல்லமுடியவில்லை. அண்ணன் என்று உரிமையோடு நான் சொன்னாலும் அவன் கேட்கப் போவதில்லை. நானும் செல்வியும் பேசாமல் வீடு திரும்பினோம்.
எழு மணியாகியும். சின்னத்தம்பி வீடு திரும்பவில்லை, அம்மாவின் இரு சகோதரிகளின் குடும்பம், அப்பாவின் இனத்தவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாட..
”என்னடா பெரி. அவன் சின்னாவுக்கு இண்டைக்கு அம்மாவின் அறுபதாவது பிறந்த நாள் என்று தெரியுமா”? அப்பா என்னை கேட்டார்
“:அவனுக்குத் தெரியும் அப்பா . தனக்கு ஒரு அவசர காரியம் இருக்கு, முடிச்சுப் போட்டு ஆறு மணிக்கு முதல் வீட்டில் இருப்பன் என்று எனக்கு சொன்னவன்:”
“ இப்ப எழு மணியாச்சு அப்ப ஏன் அவன் இன்னும் வரவில்லை?. எல்லோரும் அவனுக்ககாக காத்துகொண்டு நிற்கினம். இது சரி இல்லை. அம்மா கேக்கை வேட்டட் டும் . அவன் ஆறுதலாக வரட்டும்” அப்பா கோபத்தோடு சொன்னார்.. அவர் முகத்தில் கோபம் முதல் தடவை எனக்குத் தெரிந்தது
” கொஞ்சம் பொறுங்கோ அத்தான் என் கடைக் குட்டி செல்ல மகன் சின்னாவும் வரட்டும்” என்றாள் அம்மா
அப்பா ஒன்றும் பேசாமல் கதிரையில் போய் இருந்தார்
டெலிபோன் மணி அடித்தது நான் போய் எடுத்தேன். இன்ஸ்பெக்டர் நாதன் அங்கிள் பேசினார். அவர் சொன்னதை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைத்தேன். நான் மேலும் பேசாமல்
“அப்பாவோடு பேசுங்கள் அங்கிள்” என்று போனை அப்பாவிடம் கொடுத்தேன்
அப்பா போனில் நாதன் அங்கிளோடு பேசினார்
“ என்ன? சின்னாவின் வலது கால் . வாளால் வெட்டுப்பட்டு அவன் ஆஸ்பதிரியிலா ?. எப்படி அது நடந்தது அவனுக்கு “? அப்பா பதட்டத்தோடு கேட்டார்.
“சின்னா குழுவுக்கும் விக்டர் குழுவுக்கும் வாள் வீச்சு சண்டை நீர்வேலியில் நடந்திருக்கு . இரு குழுக்களிடையே ஏதோ போதை மருந்து வியாபார தகராறு என்று சப் இன்சஸ்பெக்டர் பெரேரா சொன்னார் . இரண்டு குழுவிலும் பலத்த காயங்கள். உங்கடை மகன் சின்னாவின் வலது கால் இரண்டாக துண்டிகப் பட்டு விட்டதாம் உடனே யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பகுதிக்கு வாரும் உங்கள் செல்ல மகனின் நிலமை மோசம் “ என்றார் இன்ஸ்பெக்டர் நாதன். அவர் சொன்னது ஸ்பீக்கரில் கேட்டது
அப்பா நெஞ்சை பிடித்தபடி கதிரையில் சாய்ந்தார்
*****
( யாவும் தற்போதைய சூழலுக்கு ஏற்ற கற்பனை)

எழுதியவர் : பொன் குலேந்திரன் கனடா (6-Dec-17, 5:41 am)
பார்வை : 190

மேலே