சற்றே கண்ணயர்ந்தேன்

சற்றே கண்ணயர்ந்தேன்,
அதிவேக தொடரி,
தொலைதூர பயணம்,
அதிகாலை நேர குளிர்,
எனை தீண்டும் தென்றல் காற்று,
ஜன்னல் ஓர இருக்கை,
என் அருகில் ஒருத்தி,
சற்றே கண்ணயர்ந்தேன்,
எனக்கு முன்பே அவள் உறங்கியிருந்தாள்,
நான் உறங்கவில்லை,
என்னால் உறங்கவில்லை,
சற்றே கண்ணயர்ந்தேன்,
ஏனோ தெரியவில்லை,
என்னவென்று புரியவில்லை,
என்னால் உறங்க முடியவில்லை,
காரணம் என்னவாக இருக்கும்.?
என் அருகில் இருப்பவளா .?
ஏன் அவளை நான் பார்த்தேன்.?
ஏன் அவள் என்னருகில் அமர்ந்தாள்.?
என் அருகில் மட்டுமே இருக்கை
காலியாக இருந்தது.
எதுவாக இருந்தால் என்ன.?
என்னால் ஏன் உறங்கமுடியவில்லை.?
சற்றே கண்ணயர்ந்தேன்,
காரணம் என்னவாக இருக்கும்.?
என் அருகில் இருப்பவளா .?
அவள் பிறை நெற்றியா.?
இல்லை, இல்லை.
அவள் இமை புருவமா.?
இல்லை, இல்லை.
அவள் விழிகளா.?
இல்லை, இல்லை.
அவள் சுவாசக்குழலா.?
இல்லை, இல்லை.
கல்பொதித்த அவள் மூக்குத்தியா.?
இல்லை, இல்லை.
அவள் இதழ்களா.?
இல்லை, இல்லை.
அவள் முகமழகா.?
இல்லை, இல்லை.
அவள் செவியா.?
இல்லை, இல்லை.
அவள் செவி மடலா.?
இல்லை, இல்லை.
அவள் கருநீள கூந்தலா.?
இல்லை, இல்லை.
அவள் மெய்உடல் வளைவா.?
இல்லை, இல்லை.
ஒருவேளை அதிவேக தொடரியால்
தண்டவாளத்தில் எழும் ஒலியா.?
இல்லவே, இல்லை.
சில நிமிடம் யோசிக்க,
கண்டறிந்தேன் காரணம்.