அனைத்தும் நீயே

உயிர் உள்ள எல்லாத்துக்கும்
உயிர் கொடுத்தவ
அவ தான ஆத்தா
நம்ம பெத்த ஆத்தா!!!
அவ இல்லைனா ஆகிடுமே
வெறும் காத்தா!
இந்த உலகம் வெறும் காத்தா!!!
பத்து மாசம் என்ன சுமக்க
பட்ட கஷ்டம் கொஞ்சமா
எங்கம்மா!
நீ பட்ட கஷ்டம் கொஞ்சம்மா !!!
எட்டி ,எட்டி
உன்ன உதைச்சப்ப
என்ன பாடு பட்டுருப்பா
எங்கம்மா!
நீ எவ்ளோ வழியை தங்கிருப்ப!!!
அந்த சுவர் இல்லாத
அறைக்குள்ளே
சுகமா என்ன வளத்தம்மா
எங்கம்மா!
நீ சுகமா என்னை வளத்தம்மா!!!
உயிர் உள்ள எல்லாத்துக்கும்
உயிர் கொடுத்தவ
அவதான ஆத்த
நம்ம பெத்த ஆத்தா!
அந்த சூரியனையும் பாத்ததில்லை!
சுவாச காற்றையும்
சுவாசித்ததில்லை!
பசியால் நான் வாடவில்லை!
பகலும், இரவும்
தெரியவில்லை!
அந்த பத்து மதம்
எல்லாமும் நீயே!
இனி வரும் காலங்களில்
எல்லாமும் நீயே!!!,,,

எழுதியவர் : ஆசை பாலா (15-Dec-17, 12:29 am)
சேர்த்தது : palani
Tanglish : anaitthum neeye
பார்வை : 127

மேலே