என் ஆசை காதலன்
சின்ன சின்ன
ஆசைகள் சேர்த்து
வைக்கிறேன் சிதையாய்
நான் மாறும்போதும்
எனக்குள் ஊடுருவிநிற்க
நீஅருந்தும் தேநீரின்
தேன்சுவை அறியஆசை!!
அழகாய் உறங்கும்
உன் கன்னத்தில்
அன்பாக ஓருமுத்தம்
வைக்க ஆசை!!!
சமையலறை வேலை
நான் பார்க்க
சாய்ந்து கொண்டு
நீஎன்னோடு சேர்ந்து
இருக்க ஆசை!!!!
பௌர்ணமி இரவில்
உன்னுடன் பால்சோறு
உன்ன ஆசை!!!!!
குடைக்குள் மழையாய்
குதித்து உன்னுடன்
விளையாட ஆசை!!!!!!!
ஊட்டிவிடும் சாதம்
உள்செல்ல மறுக்க
என் முந்தானை
கொண்டு துடைக்கஆசை!!!!!!
உறக்கத்தில் இருந்து
உன்னை விழிக்க
வைக்க நான்
போராட ஆசை
குளித்து வரும்
உன்னை என்
குழந்தையாய் நினைத்து
தலைதுவட்டி விட
ஆசையோ ஆசை*****
என் ஆசைகள்
எல்லாம் நீஅறிய
ஆசை அறிந்தே
அதை நீமறுக்க
ஆசை மறுக்கும்
உன்னை நான்
மடக்கிவிட ஆசை!!!!!!!!!!!