தமிழ் என் காதலி

தமிழே
தலை அடி சீர் தொடை நடை
இவை அனைத்தும் இருப்பதால்
நீயும் கோலப் பெண்ணே

வணக்கம் சார்
என்று ஆங்கிலத்தோடு நீ
கலந்துவிட்ட நிலைமையை
எழுதும்போது நீல மையாய்
கண்ணீர் வெடிக்கின்றது
என் நீலப் பென்னே

தமிழ் மகளே உன்
குரல் தான் எனக்குத் திருக்குறள்

உன் விரல்கள் விரல்களல்ல
அனைத்தும் மாணிக்கப் பரல்கள்

உன் கூந்தல் தொகை தான்
எனக்கு குறுந்தொகை
உன் உரு வாசகம் தான்
எனக்குத் திருவாசகம்

உன் இடையினத்தைக் கண்டபோதுதான்
குற்றிய லுகரத்தின் அர்த்தம் விளங்கியது
உன் சீர் நடையைக் கண்டபோதுதான்
நீர் வற்றிய நகரத்தின் பூக்கள் குலுங்கியது

தமிழ் மகளே
உன் சிவப்பழகைத்தான்
சிலப்பதிகாரமாய் எழுதியிருக்கின்றான் இளங்கோ
நானோ தமிழ் தேசத்தை ஆளத்துடிக்கும் இளம் கோ

தமிழே நீ அழகிகளின் பிதா மகள்
அழகான பிதா பெற்ற மகள்
நீ அ இ அ மு க வின் தலைவி( அழகிகள் முன்னேற்றக் கழகம் )

நீ பாற்கடலில் தேவர்கள் கடைந்தெடுத்த அமுதமல்ல
நூற்கடலில் தேவதைகள் கடைந்தெடுத்த குமுதம்

தமிழே நீ வள்ளுவனின் மகள்
கபிலன் வீட்டில் ஏற்றிவைத்த அகல்
கம்பனிடமிருந்து தெறித்த துகள்
அவ்வையின் நகை
அகத்தியனின் நகல்
நீ விழித்திருக்கும் நேரம்தான் எனக்குப் பகல்

நீ பாரதம் போற்றும் பாரதிக்குச் செல்லம்மா
எனக்கோ நீ செல்ல அம்மா
கொஞ்சம் கொஞ்சமாய் ஆங்கிலத்துடன் கூடி
என்னைத் தமிழ்க்காட்டில்
தவிக்கவிட்டு செல்லாதே அம்மா .

வாழ்க தமிழ் வெல்க தமிழ் ..

எழுதியவர் : குமார் (16-Dec-17, 2:56 pm)
Tanglish : thamizh en kathali
பார்வை : 289

மேலே