அன்றும் இன்றும்

அன்று உண்ட உணவு இன்றில்லை
இன்று கிடைக்கும் உணவு நாளையில்லை
அன்று பிடித்த பொருள் இன்று பிடிக்கவில்லை
அன்று நிறைந்த வாழ்க்கை இன்று வாழ வழியில்லை
அன்று கண்ட துன்பம் இன்று இன்பமாய் மாற
அன்று இருந்த துள்ளல் இன்று
சோம்பலாய் மாற
அன்று உதட்டில் கண்ட புன்னகை இன்று கண்களில் தாரைதாரையாய்
வடிய
அன்று கண்ட உலகம் இன்று காண வழியில்லை
இன்று காணும் மாயை நாளைய உலகமாய் மாறும்
எல்லாம் மாற்றம் என்னும் வலையில் சிக்கிய மீனாய்...
அன்றும் இன்றும் என்றும்

எழுதியவர் : பிரகதி (16-Dec-17, 5:03 pm)
Tanglish : anrum intrum
பார்வை : 960

மேலே