தொழில் நுட்பம்

தொழில் நுட்பம்
================================ருத்ரா

அங்கே என்ன கூட்டம்?
அந்த ரோட்டோர டிவி கடையில்
கிரிக்கெட் ஆட்டம்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவன் சற்று அங்கு
ஒதுங்கினான்.
"அடேயப்பா?
அந்த "ஸ்பின் " நம் மூக்கின் மேல்
படுகிறாப்ல
அவ்வளவு தொழில்நுட்பம்!
அவ்வளவு துல்லியம்!"
"ஆமாண்டா
இதெல்லாம் நம்ம
சேட்டலைட் நுட்பம் டா"
இருவர் பேசிக்கொண்டனர்.
சற்று நின்று
அவன் வியர்வையை
முண்டாசை அவிழ்த்து
துடைத்த பின்னர்
மாட்டுக்குபதில்
அவனே
மீண்டும்
அந்த கட்டை வண்டி பாரத்தை
இழுத்துப்போகத் தொடங்கினான்.

==================================

எழுதியவர் : ருத்ரா (18-Dec-17, 3:35 pm)
பார்வை : 101

மேலே