காதல்

ஏதேதோ படித்து
ஏதேதோ பார்த்து
நல்ல சிந்தனைகளை
சிதைக்கும் எண்ணங்கள்
வளர்த்து மோகத்தில் மூழ்கி
காமம் தலைக்கேற
காதல் தேடி அலைந்தால்
காதல் கிடைக்காது -காதல்
ஒரு போதும் விலைபோகும்
பொருளல்ல அது
பார்வையால், உள்ளதால்
ஒன்றிய இருவர் இடையே
தோன்றும் உறவு
அன்பும் அரவணைப்பும்
அதன் அங்கங்கள் அது
பண்போடு எப்போதும் வளர்வது
அதில் காமம் கலக்காது என்று
சொல்லவில்லை , காமம் அதில்
இளநீரில் கலந்த சுவைபோல
ரோஜாவின் மணம்போல
ஒன்றிலிருந்து மற்றோன்றை
பிரித்திட முடியாது -காதல்
அன்பு,பண்பு,காமம் சேர்ந்த
ஒரு ரசாயன கலவை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Dec-17, 6:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 343

மேலே