முண்டாசுக் கவிஞன்

காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா(பாரதி)

என காக்கையைக் கூடக் கண்ணனுக்கு
உரித்தாக்கிப் பெருமைப் படுத்திய கவியரசு நீ...

ஏர் பூட்டி விதை விதைத்த நாட்களிலே
வீரம் விதைத்தாய் நீ என் மனதில் அழமாக
எடுத்துக் கூறினாய் எங்கள் அடையாளம்
அது ஏற்படுத்தியது வெள்ளையனுக்கே மரண ஓலம்...

மீசை கவிஞனே,
உன் முகம் எங்கள் வீரத்திற்கும்,தமிழுக்கும் அடையாளம்...

பாரதத் தாயின் தலைப்புதல்வனே..
உன்னைப் பெற்றதால் தமிழன்னைக்கே பெருமை
விடுதலைப் பிரியனே,
உந்நன் வரிகள் ஏடுகளில் மட்டும் பொறிக்கப்படவில்லை
எங்கள் இதயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
அது எங்களைத் தூண்ட
வெள்ளையனின் அதிகாரம் எரிக்கப்பட்டுள்ளது!!!

எழுதியவர் : சே.சுரேஷ்தழிழ் (19-Dec-17, 6:40 pm)
சேர்த்தது : சேசுரேஷ்தமிழ்
பார்வை : 101

மேலே