அமைதிநிறை ஆழ்கடலாகும்

​​அலங்கார சிலை​போல ​
அன்னநடை பயிலுமிவள் ​
​மண்குடங்கள் தாங்கிட்டு
நிலம்வந்த நிலவுமிவள்
வளைந்தாடும் பின்னலுடன்
அசைந்தாடும் ஆழித்தேரன்றோ !

இசைபாடும் வளையளுடன்
இமைக்காத விழிகளையும்
இருநொடி நோக்கினால்
நாடித்துடிப்பும் நிற்கிறது
கானம்பாடி மகிழ்கிறது
களிப்புற்ற நெஞ்சமது !

நீரெடுக்க வந்தவளை
ஏறெடுத்துக் கண்டதும்
வாயடைத்துப் போகும்
வாரியணைக்கத் தோன்றும்
அல்லல்படும் உள்ளங்களும்
அமைதிநிறை ஆழ்கடலாகும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Dec-17, 3:16 pm)
பார்வை : 662

மேலே