சட்டம் யார் கையில்

* கந்துவட்டிக்காரன் கைதாகாமல்
காக்கிச் சட்டைக்குள்ளே ஒளிந்து கிடக்கிறான்
* போதையில் வாகனம் ஓட்டி பாதசாரிகளின் உயிர் பறித்தவன்
போஃர்ப்ஸ் பத்திரிக்கையில் இடம் பிடிக்கிறான்
* கட்சி பேனரால் உயிரிழந்தவனை போதையில் வந்தவன் என பழி சுமத்துகிறான்
* ஆடம்பர உடை
அடிக்கடி அயல்நாடு பயணம்
விலைமிக்க கடிகாரம் அணிந்தவன்
கறுப்பு பணம் ஒழிப்பேன் என்கிறான்
* கோவில்,மசூதி,சர்ச் இங்கு பிச்சைகாரர்கள் குறைந்து விட்டார்கள் என நினைத்தால்
காக்கி உடையில் முக்கிய சந்திப்பில் எந்நேரமும் காத்துக் கிடக்கிறான்
*அலைக்கற்றை ஊழலில் தின்று செழித்தவர்கள் நிரபராதி என்று விடுதலை ஆகிறான்
*குற்றம் புரிந்தவன் உத்தமனாகிறான்
* தண்டிக்கும் சட்டம் மெத்தனமாகிறது
*சட்டம் அதிகமான காந்தி நோட்டு உடையோர் கையில்

எழுதியவர் : (23-Dec-17, 12:33 pm)
சேர்த்தது : Gopi
Tanglish : sattam yaar kaiyil
பார்வை : 59

மேலே