வசந்த அழைப்புகள்
விண்ணில் உலவும் வெண்ணிலவே...
விண்ணைத்தாண்டி வருவாயா?
தழுவி நழுவும் மென்காற்றே
தங்கி சுகத்தை தருவாயா?
மலையின் மடியில் அருவியே
மாசற்ற மனதை தருவாயா?
மண்ணைக் கழுவும் வான்மழையே
மனதையும் கழுவி விடுவாயா?
இரவில் கண் சிமிட்டும் விண்மீணே
இன்பத்தை இரவல் தருவாயா?
சிரித்து தலையாட்டும் வண்ணமரே
சிரிக்கும் இதழை தருவாயா?
எங்கும் நிறைந்த இயற்கையே
எதிலும் மகிழ்ச்சி அளிப்பாயா??