இயற்கை இடையூறு
மரம் காற்றிலே அசைந்தாடி
பரவலாய் மழை தூறும்
பாரமாய் அதை எண்ணி
பழிவாங்கி வெட்டியதால்
காற்றுகள் அத்துப்போச்சி
கானல் நீர் சேர்ந்துப்போச்சி
நீர் ஓடுகின்ற இடம் எல்லாம்
ஓட்டு வீடு ஆகிப்போச்சி
வடிகின்ற நீர் எல்லாம்
படி வந்து போகும் தெரியாதா
இரசாயன கழிவு எல்லாம்
கடலில் கலந்து
தண்ணீர் கூட காந்தலாச்சி
மொத்தத்தில்
இடையூறாய் முதலில் நின்றவனின்
வக்கணையான பழி பேச்சி
இயற்கை இடையூறு என்று......
இடையூறாய்,
நமக்கு இயற்கையா
இல்லை இயற்கைக்கு நாமா....